எருவில் கல்வி சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் (எஸ்டா ) ஊடாக தற்போது நாட்டில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள வேளையிலும் உலருணவு பொதிகள் வழங்கும் மனித நேயப்பணி கட்டம் 02. எருவில் கிராமத்தை சேர்ந்தவரும் தற்போது கட்டார் நாட்டில் தொழில் புரிபவருமான க .மகாநாதன் அவர்கள் அமைப்பின் சேவைகளை பாராட்டியதுடன் தாமாகவே முன் வந்து அமைப்பின் ஸ்தாபகர் சமூக சேவகர் அ .வசீகரன் அவர்களை தொடர்பு கொண்டு கஷ்ட நிலையில் உள்ள எருவில் கிராம உறவுகளுக்கு உலருணவு பொதிகளை வழங்குமாறு 30000 ரூபா நிதி உதவியினை வழங்கியதன் அடிப்படையில் 25 குடும்பங்களுக்கான உலருணவு பொதிகள் அமைப்பின் உறுப்பினர்களால் வழங்கி வைக்கப்பட்டன
க .மகாநாதன் அவர்கள் தான் வெளிநாடு சென்ற காலம் தொடக்கம் உதவிகள் தேவைப்பட்ட உள்ளூர் வெளியூர் உறவுகளுக்கு உதவிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது .
இந்தவேளையில் அவருக்கு அமைப்பின் செயலாளர் ஆசிரியர் இ.ஜீவராஜ் நன்றிகளை தெரிவிப்பதுடன் இக்கட்டான சூழலிலும் எம் உறவுகளுக்கு உதவுவதற்கு களப்பணியில் நின்ற அமைப்பின் ஆலோசகரும் அகில இலங்கை சமாதான நீதிவானுமாகிய திரு ச .பேரின்பநாயகம் ஐயா மற்றும் அமைப்பின் உறுப்பினர்களும் கலந்துகொண்டு வழங்கிவைத்தனர்.










Post A Comment:
0 comments so far,add yours