நூருல் ஹுதா உமர்
அண்மைக்காலமாக டெங்கு நுளம்பின் ஆதிக்கம் சமிக்கை காட்டி வருகின்றதை அவதானிக்க கூடியதாக இருக்கும் வகையில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக ஊழியர்களால் நாளாந்தம் களச் செயற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. ஒரு டெங்கு நோயாளர் அடையாளம் காணப்பட்டதுடன் அதனை அண்டிய பகுதியில் புகை விசிறல் (Fogging) நடவடிக்கையும் நேற்று மேற்கொள்ளப்பட்டது. "கொவிட்-19 யின் தாக்கம் ஆதிக்கம் செலுத்தும் இந்த காலப்பகுதியில் ஆட்கொள்ளியான டெங்கு நோயும் ஊடுருவி நம்மை வந்தடைவதை மறந்து விடாதீர்கள்" ஆகவே சுற்றுப்புற சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.



Post A Comment:
0 comments so far,add yours