( வி.ரி.சகாதேவராஜா)
முடக்கப்பட்ட அம்பாறையையடுத்துள்ள புதிய வளத்தாப்பிட்டிக் கிராம மக்களுக்கென இரண்டாம் தொகுதி உலருணவு நிவாரணப்பொதிகளை சமுகசேவையாளரும் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் உலருணவுப் பொதிகளை நேற்று வழங்கிவைத்தார்.
வளத்தாப்பிட்டி கொவிட் 19 உறவுகள் கிராமஅமைப்பின் முக்கியஸ்தர் வெ.ஜெயச்சந்திரன் விடுத்த வேண்டுகோளுக்கமைவாக இம் இரண்டாம்கட்ட நிவாரணத் தொகுதி வழங்கப்பட்டது. ஆயிஷா அறக்கட்டளை நிதிய அனுசரணையின்கீழ் இவ்வுதவி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 15நாட்களுக்கு மேலாக தனிமைப்படுத்தப்பட்ட எமது கிராம மக்களுக்காக முதன்முதலில் சமுகசெயற்பாட்டாளர்களான தவிசாளர் கி.ஜெயசிறில் உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் உயிரைத் துச்சமென மதித்து காரைதீவிலிருந்து இங்குவந்து இவ்வுதவியை எமக்கு வழங்கிவைத்தமைக்காக எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்என தலைவர் வெ.ஜெயச்சந்திரன் அங்கு நன்றிகூறினார்.






Post A Comment:
0 comments so far,add yours