பைஷல் இஸ்மாயில் -
கொவிட் 19 நோய் தொற்று காரணமாக அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 3 தொற்றாளர்கள் நேற்றயதினம் (08) பூரண சுகம் பெற்று வெளியேறினார்கள். அவர்களுக்கான நோய் நிர்ணய அட்டைகளை கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி இ.ஸ்ரீதர் தாதிய உத்தியோகத்தரிடம் வழங்கி வைத்தார்.
கல்முனை பிராந்திய ஆயுர்வேத இணைப்பாளரும், நிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருமான டொக்டர் எம்.ஏ.நபீல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின் போது வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி டொக்டர் எம்.பி.எம்.றஜீஸ், கொவிட் 19 தடுப்பு சிகிச்சை நிலையப் பொறுப்பதிகாரி டொக்டர் ஐ.எல்.அப்துல் ஹை, சுதேச மருத்துவ திணைக்கள கணக்காளர் என்.பாலநந்தன், நிருவாக உத்தியோகத்தர் திருமதி. எஸ்.நவேந்திரராஜா உள்ளிட்ட வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் பலர் இதில் கலந்துகொண்டனர்.
இதன்போது, கொவிட் 19 சிகிச்சையாளர் பிரிவுகளில் நிலவும் பிரச்சினை, நோயர்களுக்கு வழங்கும் சிகிச்சை மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் பற்றிய ஆராய்ந்த அதேவேளை கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களிடம் நோய் பற்றிய தகவல்களையும், அவர்களின் தற்போதை உடல் நிலை பற்றியும் மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி இ.ஸ்ரீதர் கேட்டறிந்து கொண்டார்.


Post A Comment:
0 comments so far,add yours