துதி

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) 32வது வீரமக்கள் தின நிகழ்வு முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட கிளையினால் இன்றைய தினம் கிரான்குளம் சீ மூன் ஹோட்டல் மண்டபத்தில் அமைதியான முறையில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இடம்பெற்றது.


ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் ம.நிஸ்கானந்தராஜா தலைமையில் இடம்பெற்ற இவ்அனுஸ்டிப்பு நிகழ்வில் முன்னணியின் மத்திய செயற்குழு உறுப்பினர்களான ந.ராகவன், கா.கமலநாதன், க.கிருபைராஜா, மாவட்ட குழு உறுப்பினர்களான ஞா.தவராஜா, ச.அருள்ராஜா உட்பட கழக உறுப்பினர்கள் மற்றும் இறந்த உறுப்பினர்களின் உறவினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது புளொட் அமைப்பின் செயலதிபர் க.உமாமகேஸ்வரன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் செயலாளர் நாயகம் அ.அமிர்தலிங்கம் ஆகியோரின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு, சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours