சம்மாந்துறைப் பிரதேசத்திலுள்ள ஏழு(7) அரச மற்றும் தனியார் வங்கிகளில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள் 70பேருக்கு கடந்த (16)வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையின் பெறுபேறு தற்போது கிடைக்கப்பெற்றுள்ளது.
சம்மாந்துறை நகரிலுள்ள மக்கள்வங்கி ,ஹற்றன்நாசனல் வங்கி, அமானாவங்கி ,தேசியசேமிப்
சம்மாந்துறை சுகாதாரவைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ஜ.எம்.கபீர் தலைமையிலான சுகாதாரத்துறையினர் , சோதனை நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துவருகின்றனர்.
மேற்பார்வை பொதுச்சுகாதாரபரிசோதகர் எஸ்.எ.றாசிக், பொதுச்சுகாதாரப்பரிசோதகர் முருகேசு ராஜ்குமார் உள்ளிட்ட குழுவினர் இச்சோதனை நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.
இதேவேளை நேற்றும் 3வங்கிகளில் கடமையாற்றும் 33 ஊழியர்களுக்கு ,எழுமாறான பிசிஆர் சோதனை நடாத்தப்பட்டுள்ளது.
சம்மாந்துறை இலங்கைவங்கி ,எல்பி பினாஸ்ஸ் மற்றும் ஆசியாஅசெற் ஆகிய நிதி நிறுவனங்களின் ஊழியர்களே இவ்விதம் சோதனைக்குட்படுத்தப்பட்டனர். இதற்கான அடீவகள் நாளை கிடைக்கப்பெறலாமெனத் தெரிகிறது.

Post A Comment:
0 comments so far,add yours