த.தவக்குமார்
வெல்லாவெளி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட அம்பிளாந்துறை வெல்லாவெளி வீதியில் நேற்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் வீதியினை தாண்ட முற்பட்ட மாடுகளை கல்ஏற்றி வந்த கனகரக வாகனம் மோதியதில் தலத்தில் ஒரு மாடு இறந்ததுடன் மேலும் பல மாடுகள் காயமடைந்துள்ளன.
சம்பவ இடத்திற்கு சென்ற வெல்லாவெளி பொலிஸார் விபத்துக்குள்ளான மாடுகளை பொதுமக்களின் உதவியுடன் வீதியைவிட்டு அகற்றியதுடன் விபத்தினை ஏற்படுத்திய கனகரக வாகனம் மற்றும் சாரதியை கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக நிலைய பொறுப்பதிகாரி ஆனந்தசிறி தெரிவித்துள்ளார்.



Post A Comment:
0 comments so far,add yours