(திருக்கோவில் -எஸ்.கார்த்திகேசு)
சர்வதேச கண்டல் தாவர பாதுகாப்பு தின மாவட்ட நிகழ்வு திருக்கோவில் பிரதேசத்தில் தாண்டியடி உமிரி கிராமத்தில் இன்று மிகவும் சிறப்பாக இடம்பெற்று இருந்தன.
இந்நிகழ்வானது காடுகள் பேணும் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கரைNயுhரத்தைப் பேணும் முகமாக கண்டல் தாவர சூழற் தொகுதியை பாதுகாக்க ஒன்றுபடுவோம் எனும் தொனிப் பொருளில் திருக்கோவில் தாண்டியடி உமிரி களப்பு பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை(26) இடம்பெற்று இருந்தன.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வனஜீவராசிகள் பாதுகாப்பு யானை வேலி காடுகள் மீள் வளர்ப்பு வனவள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் விமல வீர திஸாநாயக்க கலந்து கொண்டு இருந்தார்.
இதன்போது அமைச்சரினால் உமிரி களப்பு பிரதேசத்தில் கண்டல் தாவரங்கள் நடப்பட்டு இருந்ததுடன் இங்கு உள்ள கண்டல் காடுகளையும் அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டு இருந்தார் அத்தோடு கண்டல் தாவரங்களின் முக்கியத்தவம் தொடர்பாக விரிவான விளக்கங்களும் துறைசார் அதிகாரிகளால் வளங்கப்பட்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் விமல வீர திஸாநாயக்க பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் திலக் ராஜபக்ஷ அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல். பண்டாரநாயக்கா திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.அனோஜா மற்றும் காடுகள் பேணும் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் வனபரிபாலன உயர் அதிகாரிகள் பொலிஸ் இராணுவம் அரச அதிகாரிகள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.



Post A Comment:
0 comments so far,add yours