நூருல் ஹுதா உமர்

ஆரோக்கியமான உற்பத்தித்திறன் மிக்க பிரஜைகளை உருவாக்குவதற்கு நச்சுத் தன்மையற்ற உணவை பெற்றுக்கொள்வதற்கான மக்களின் தார்மீக உரிமை "சுபீட்சத்தின் நோக்கு" எனும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அவர்களின் கொள்கைப் பிரகடனத்தின் அடிப்படையில், அக்கரைப்பற்று மாநகர சபையினால் ஏலவே முன்னெடுக்கப்படும் சேதனப்பசளை உற்பத்தியினை எதிர்வரும் காலங்களில் அதிகரிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை (16) மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி தலைமையில் மாநகர சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

உலகில் இரசாயனக்கலப்புடனான விஷத்தன்மை கொண்ட உணவுவகைகளை உட்கொள்ளும் நாடுகள் பட்டியலில் இலங்கை முதலிடம் வகிப்பதாக உள்நாட்டு, வெளிநாட்டு ஆராய்ச்சி நிபுணர்கள் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், ஜனாதிபதியின் காலப்பெறுமானம் மிக்க இயற்கை உரப்பாவனையை விவசாயிகள் மத்தியில் விஸ்தரிக்கும் உயிர்ப்புள்ள கொள்கை திட்டத்தை கடந்த பத்து வருடங்களாக அக்கரைப்பற்று மாநகர சபை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த விசேட கலந்துரையாடலில் அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ. றாஸீக், அக்கரைப்பற்று மாநகர சபை ஆணையாளர் ஏ.ரீ.எம்.றாபி, பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எப்.எம்.ஏ. காதர், பிரதேச செயலக பிரதி திட்டமிடல் அதிகாரி, மாநகர சபை வைத்தியர் மற்றும் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, இராணுவ உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து அக்கரைப்பற்று ஆலிம் நகரில் அமைந்துள்ள  அக்கரைப்பற்று மாநகர சபை செயற்படுத்தும் சேதனப் பசளை உற்பத்தியகத்தை மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் சென்று பார்வையிட்டனர் .



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours