கல்வியமைச்சினால் மட்டக்களப்பு மண்முனை மேற்கு கல்வி வலயத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு கையேட்டு கணிணி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
கொரோனா காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் இணையவழி மூலமான கற்றல் செயற்பாடுகள் கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் நாடு பூராகவும் நடைபெற்றவரும் போதிலும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பின்தங்கிய கிராமபுற மாணவர்கள் இணையவழி கற்றல்களில் ஈடுபடுவதானது மிகுந்த சவாலாக அமைந்துள்ளது. ஆகவே பின்தங்கிய கிராம மக்களின் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் கல்வியமைச்சினால் மாணவர்களுக்கு கையேட்டு கணிணி வழங்கும் செயற்றிட்டம் வழங்கும் படுவான்கரை பகுதியில் இடம்பெற்றது.
இதன் ஒரு கட்டமாக மட்டக்களப்பு மண்முனை மேற்கு கல்வி வலய பகுதி தெரிவு செய்யப்பட்ட 7 பாடசாலைகளை சேர்ந்த 315 மாணவர்களுக்கு கல்வி பணிக்காக கையேட்டு கணிணி வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு குறிஞ்சாமுனை பாடசாலையில் இடம்பெற்றது.
மண்முனை மேற்கு வலய கல்வி பணிப்பாளர் அகிலா ஞானசூரியம் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக பின்தங்கிய கிராம அபிவிருத்தி மற்றும் மனைசார் கால்நடை வளர்ப்பு,சிறு பொருளாதார மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம்-வியாழேந்திரன் அவர்களும்,மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.சந்திரகாந்தன் அவர்களும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன் மற்றம் வலய கல்வி பணிமனை உயர் அதிகாரிகள்,அதிபர்கள்,ஆசிரியர்




Post A Comment:
0 comments so far,add yours