(திருக்கோவில்  நிருபர்-எஸ்.கார்த்திகேசு)

திருக்கோவில் பிரதேச செயலக சமூர்த்திப் பிரிவினால் சௌபாக்கியா திட்டத்தின் ஊடாக மீன்பிடி வள்ளம் வீடுகள் கையளிப்பு

அம்பாரை திருக்கோவில் பிரதேச செயலகத்தின் சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களப் பிரிவின் ஊடாக மீவனர் ஒருவருக்கு ஆழ்கடல் மீன்பிடி வள்ளம் மற்றும் நான்கு பயனாளிகளுக்கு வீடுகள் என்பன கையளிக்கப்பட்டு இருந்தன.

இந்நிகழ்வுகள் கொவிட்19 சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் திருக்கோவில் பிரதேச செயலக தலைமை முகாமையாளர் பி.பரமானந்தம் தலைமையில் இன்று இடம்பெற்று இருந்தன.

இவ் ஆழ்கடல் மீன்பிடி வள்ளம் மற்றும் வீடுகள் என்பன சமூர்த்தி லொத்தர் சீட்டிழுப்பின் ஊடாக தெரிவு செய்யப்பட்டு இருந்த சமூர்த்திப் பயனாளிகளுக்கு தலா 2இலட்சம் பெறுமதியான  நிதிகள் வழங்கப்பட்டு இவ் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு இருந்தன.

இந்நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் பிரமத அதிதியாக கலந்து கொண்டு வைபவ ரீதியாக மீன்பிடி வள்ளம் மற்றும் வீடுகளை சமூர்த்திப் பயனாளிகளிடம் கையளித்து இருந்ததுடன்

நிகழ்வில் சமூர்த்தி தலைமை முகாமையாளர் பி.பரமானந்தம் விநாயகபுரம் தம்பிலுவில் சமூர்த்தி வங்கி முகாமையாளர்கள் வங்கி உதவி முகாமையாளர்கள்  சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து கொண்டு இருந்தனர். 




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours