பாடசாலை ஆசிரியர்களுக்கு அடுத்த வாரம் கோவிட் தடுப்பூசி ஏற்றுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அனுமதி வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
242,000 ஆசிரியர்களுக்கு தடுப்பூசி ஏற்றுவதற்கு கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்று கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலைகளை திறப்பது குறித்து ஜனாதிபதியுடன் நீண்ட பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி ஏற்றப்பட்டதன் பின்னர் ஆசிரியர்கள் பாதுகாப்பாக உணர்வார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post A Comment:
0 comments so far,add yours