(திருக்கோவில் -எஸ்.கார்த்திகேசு)

திருக்கோவில் பிரதேசத்தில் காணி அனுமதிப் பதத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

அம்பாரை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் வாழும் 35 குடும்பங்களுக்கு காணி அனுமதிப் பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வு திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரனின் தலைமையில் தாணிடியடி கிராமத்தில் நேற்று இடம்பெற்ற இருந்தன.

இதன்போது காணிக்காக விண்ணப்பித்து இருந்த குடும்பங்களுக்கு காணி ஆணையாளர் நாயகத்தின் திணைக்களம் காணி மற்றும் காணி மேம்பாட்டு அமைச்சின் ஊடாக திருக்கோவில் பிரதேச செயலகத்தினால் இவ் காணி அனுமதிப் பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இவ் காணி அனுமதிப் பத்திரங்களை வனஜீவராசிகள் பாதுகாப்பு யானை வேலி காடுகள் மீள் வளர்ப்பு வனவள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் விமல வீர திஸாநாயக்கா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இவ் காணி அனுமதிப் பத்திரங்களை இருந்தார்.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் விமல வீர திஸாநாயக்க பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் திலக ராஜபக்ஷ அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்கா திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.அனோஜா மற்றும் அரச அதிகாரிகள் ஆகியோரும் கலந்த கொண்டு இருந்தனர்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours