மட்டக்களப்பு மத்தி விவசாய விரிவாக்கல் பிரிவிலுள்ள பன்சேனை, நல்லதண்ணி ஓடையில் சேதனப்பசளை தயாரிக்கும் பயிற்சி இன்று வியாழக்கிழமை (15.07.2021ம் திகதி) இடம்பெற்றது.

மட்டக்களப்பு மத்தி வலய உதவி விவசாயப் பணிப்பாளரின்  ஆலேசனைக்கு அமைவாக பன்சேனை விவசாய போதனாசிரியர் பிரிவின் விவசாய போதனாசிரியர் திருமதி சுதர்சனா ஞானப்பிரகாசம் தலைமையில்  நல்லதண்ணிஓடை கிராமத்தில் இக் கூட்டெரு சேதனப்பசளை தயாரிப்பு தொடர்பான விழிப்புணர்வும் செய்முறைப்  பயிற்சியும் நடை பெற்றது.

இதன்போது விவசாய போதனாசிரியர் திருமதி சுதர்சனா ஞானப்பிரகாசத்தினால் கூட்டெரு (சேதனப்பசள) தயாரித்தர் தொடர்பாக பயிற்சியளிக்கப்பட்டது.

இதன்போது விவசாயிகள் கமநல அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours