(க.விஜயரெத்தினம்)
தமிழ் சமூகத்தில் தமிழ் அரசியவாதிகள் தமிழ்மக்களின் தூரநோக்குடன் சிந்தித்து செயல்பட வேண்டும்.நாட்டிலே போராட்டத்தில் மரணித்த மக்களின் உடல்களில் ஏறிக்கொண்டு அரசியல் சவாரி செய்வதை தமிழ்தலைமைகள் நிறுத்தி தமிழ்மக்களின் நல்லெண்ணங்களுங்கு மதிப்பளித்து அவர்களின் அடிப்படைப்பிரச்சனைக்கு தமிழ் அரசியல்வாதிகள் முனைப்புடன் செயற்பட வேண்டும் எனத்தெரிவித்தார்.மட்டக்களப்பு செங்கலடி ரமேஸ்புரத்தில் 40.4 மில்லியன் செலவில் வீதி,வடிகாணுக்கான வேலைத்திட்டத்தை பின்தங்கிய கிராம அபிவிருத்தி மற்றும் மனைசார் கால்நடை வளர்ப்பு,சிறு பொருளாதார மேம்பாட்டு இராஜாங்க அமைச்ர் எஸ்.வியாழேந்திரன்.
மட்டக்களப்பு செங்கலடி ரமேஸ்புரம் பிரதேசத்தில் வீதி மற்றும் வடிகாணிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(18)இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
ரமேஸ்புரம் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் பூஜை வழிபாடுகளுடன் 40.4 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் இவ் வீதி மற்றும் வடிகாண் வேலைகள் சுபீட்சத்தின் கீழ் நாட்டை கட்டியெழுப்புவோம் எனும் ஜனாதிபதியின் தொனிப் பொருளுக்கமைய ஒரு இலட்சம் கிலோ மீற்றர் வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மற்றுமொறு கட்டம் இன்று ரமேஸ்புரம் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் இராஜாங்க அமைசர் சதாசிவம் வியாழேந்திரன்,ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச தவிசாளர் சி.சர்வானந்தன், செங்கலடி பிரதே சபை செயலாளர், வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் மற்றும் தமிழர் முற்போக்கு கழக உறுப்பினர்கள்,பொது மக்களென பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இந் நிகழ்வில் உரையாற்றிய இராஜாங்க அமைசர் எஸ்.வியாழேந்திரன் தெரிவிக்கையில்...
ஜனாதிபதியின் சுபீட்சத்தின் பால் நாட்டைக்கட்டியெழுப்புவோம் எனும் தொனிப் பொருளின்கீழ் பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைபெறுகின்றது.எதிர்க்கட்சியின
அதன் பின் தற்போது உலக நாடுகளையே கொரோனா வைரஸ் தாக்கம்.இந்த சூழலிலே பொருளாதார ரீதியாகவும் மக்களின் வாழ்க்கை முறைமையை கட்டியமைக்கவேண்டும் என்பது அரசின் பொறுப்பாக இருந்துவருகின்றது.
ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் பல வாக்குறுதிகளை வழங்கினார். நாமும் பாராளுமன்ற தேர்தல் காலப்பகுதியில் பல வாக்குறுதிகளை வழங்கினோம்.மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற மிகவும் சிரமத்துடன் செயற்படுகின்றோம்.பேசுவது இலகுவான விடயம் அதற்கு செயற்பாட்டுவடிவம் கொடுப்படுது கஸ்டமாகவிடயம்.பல விமர்சனங்கள் பிரசினைகளை கடந்து மக்களின் பிரச்சிணைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும்.
அடுத்த அடுத்த கட்டங்களில் கிராமிய வீதிகள் கிராமிய பாலங்கள் செப்பனிடவேண்டியுள்ளது. ஒரு வருட காலத்தினுள் அரசாங்கம் பல வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது.குடிநீர் அற்றோருக்கு குடிநீர்த்திட்டத்திற்கான வேலைகள் நடைபெறுகின்றது. மட்க்களப்பு மாவட்டத்தில் ஒரு வருடகாலப்பகுதியில் 15தேசிய பாடசாலைகளை பெற்றுக் கொடுத்திருக்கின்றோம்.
உலக நாடுகளில் 50 நாடுகளுக்கு மேல் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்முடியாமல் உள்ளார்கள்.தடுப்பூசிகளுக்கு தட்டுபாடு உள்ளது.எமது நாட்டில் சீனா,அமெரிக்கா, இந்தியா,போன்ற நாடுகளில் இருந்து தடுப்பூசிகளை அரசாங்கம் கொண்டு வந்துகொண்டிருக்கின்றது. இன்னும் தடுப்பூசிகள் நாட்டுமக்களுக்கு வழங்கவேண்டும் என்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதுடன் கொரோனோ தொற்றிலிருந்து நாட்டுமக்களை பாதுகாப்பதில் துரித கவனம் செலுத்தி வருகின்றது.
புன்னக்குடாவிலே 265 ஏக்கர் பரப்பில் தொழிற்சாலைக்கான கட்டுமாணப்பனிகள் நடைபெறுகின்றன.அந்தக்காணியைக்கூ
முஸ்லிம் அரசியல்வாதிகள் தேர்தல் காலத்தில் மிகக்கடுமையாக சண்டைபிடிப்பார்கள்.சமூகத்தில் பிளவுகள் நடைபெறும்.ஆனால் தேர்தல் முடிந்ததும் தேர்தல்கால வன்முறைகளை மறந்து ,தனது சமூகத்திற்காக ஒற்றுமையாக செயற்படுவர்.இதை ஒரு சில தமிழ் அரசியல் வாதிகள் கற்றுக்கொள்ளவேண்டும்.தமிழ்மக்க



Post A Comment:
0 comments so far,add yours