(வி.ரி.சகாதேவராஜா)
வரலாற்றுப்பிரசித்திபெற்ற சம்மாந்துறை கோரக்கர் ஸ்ரீ அகோரமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த தீமிதிப்பு உற்சவம் (23(வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
நள்ளிரவில் தீமூட்டி அதிகாலையில் ஆலய பிரதமபூசகர் முருகேசு ஜெகநாதன்(ஆனைக்குட்டி) தலைமையில் தீமிப்பு வைபவம் நடைபெற்றது.
கொவிட் காரணத்தினால் மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களே கலந்துகொண்டனர். ஆலய நிருவாகத்தினர் மற்றும் பக்தர்கள் ; சுகாதாரமுறைப்படி கலந்துகொண்டனர்.
கடந்த 13ஆம் திகதி காரைதீவில் கடல்நீர் எடுத்துவந்து திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமான வருடாந்த உற்சவம் நேற்று தீமிதிப்புடன் நிறைவடைந்தது.
தீமிதிப்பிறகுக முன்னதாக ஆலய உபதலைவர் வி.மோகன் தீமிதிப்பின்போது பின்பற்றவேண்டிய நடைமுறைகள் பக்தர்கள் பின்பற்றவேண்டிய சுகாதாரநடைமுறை விதிகள் பற்றி உரையாற்றினார்.
தீமிதிப்பு உற்சவமானது நேற்று நிறைவடைந்ததருணம் சர்க்கரைஅமுது படைத்தல் முதல் சாட்டையடித்தல் வரையிலான மரபுரீதியான சடங்குகள் இடம்பெற்றன்.



Post A Comment:
0 comments so far,add yours