(எம்.ஏ.றமீஸ்.நூருள் ஹுதா உமர்)

இலங்கை, தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட முதலாவது விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் குறித்த  சர்வதேச ஆய்வு மாநாடு இன்று(27) பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடக்  கேட்போர் கூடத்தில்  இணைய வழி சூம் தொழில் நுட்பத்தில்   இடம்பெற்றது.  
இப்பல்கலைக்கழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட தொழில்நுட்ப பீடத்தினால் முதன் முதலாக இடம்பெறும் இவ் ஆய்வு மாநாடு மிகக் குறுகிய காலப் பகுதிக்குள் மிகச் சிறந்த முறையில் ஒழுங்கமைக்கப்பட்டு நடைபெற்றதாக கல்வித்துறையினர் சுட்டிக் காட்டுகின்றனர்.
'தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கக் கண்டுபிடிப்பு மூலமாக நிலைபேறு தன்மைக்கான விருத்தியினை மேம்படுத்தல்' எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இவ் ஆய்வரங்கு, பல்கலைக் கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தின் பீடாதிபதி கலாநிதி யூ.எல்.அப்துல் மஜீட் தலைமையில் நடைபெற்றது.
தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜிம் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு ஆய்வு மாநாட்டினை ஆரம்பித்து வைத்தார்.  இவ்வாய்வு மாநாட்டில், மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் பட்டப்படிப்பு கற்கைகள் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் அஜித் டி அல்விஸ் பிரதம பேச்சாளராக சிறப்புரையாற்றினார். இவ் ஆய்வு மாநாடு இணைய வழி மூலம் பல்வேறு நாடுகளைகளைச் சேர்ந்தவர்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது.
இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஐரோப்பிய ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த பல்வேறு துறைசார் கல்வியியலாளர்களின் ஆய்வுக் கட்டுரைகள் சமர்க்கப்பட்டன. இதன்போது மாநாட்டு சிறப்பு மலர் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன், அதிதிகள் நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இவ் ஆய்வரங்கு மாநாட்டின்போது ஆராய்ச்சியினை அடிப்படையாகக் கொண்டு எதிர்கால சந்ததியினரின் அறிவினை விருத்தி செய்தல், தொழில்நுட்ட விருத்திக்கான நிலைபேறு தன்மையைக் கட்டியெழுப்புதல் போன்ற தொனிப் பொருளில் சமர்ப்பிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான ஆய்வுக் கட்டுரைகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட சுமார் ஐம்பது  ஆய்வுக் கட்டுரைகள் பரிந்துரைக்கப்பட்டு தெரிவுக்காக சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours