துதி

நாட்டின் நிலவுகின்ற கொவிட் நிலைமையினால் பாதிப்புற்ற வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கும் செயற்திட்டம் நாவிதன்வெளி பிரதேசபை உறுப்பினர் திருமதி பார்தீபன் தர்சினி அவர்களின் ஏற்பாட்டில் நாவிதன்வெளி 01ல் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் மற்றும் நாவிதன்வெளி 02 கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் வே.இராஜகோபால் உட்பட பயனாளிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

பாராளுமன்ற உறுப்பினரின் வேண்டுகோளுக்கு அமைவாக நாவிதன்வெளி பிரதேசத்தைச் சேர்ந்த அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இராஜகோபால் அருண், சந்திரசேகரம் தீபன் மற்றும் சிவலிங்கம் சுகதாஸ் ஆகியோரின் நிதியுதவியின் மூலம் மேற்படி பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 40 குடும்பங்களுக்கு மேற்படி உதவி வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours