நூருல் ஹுதா உமர்

பெருந்தோட்டத்துறை அமைச்சு மற்றும் தென்னை, கித்துல் மற்றும் பனை செய்கை மேம்பாடு மற்றும் அவை சார்ந்த கைத்தொழில் பண்டங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சு இணைந்து மேற்கொள்ளும் வீட்டுக்கு வீடு 'கப்ருக' 40 இலட்சம் தென்னங் கன்றுகள் நடும் தேசிய
வேலைத்திட்டம் அங்குரார்பண நிகழ்வு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் நெறிப்படுத்தலில் கல்முனையில் (10) இடம்பெற்றது .

பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீசின் பிரத்தியேக செயலாளர் நெளபர் ஏ.பாவா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான எம் எஸ்.எம். சத்தார், எம்.எஸ்.எம்.ஹாரீஸ், எம் எஸ்.எம்.நிசார், எம்.உமர் அலி, சட்டத்தரணி அன்புமுகையதீன் றோசன் அக்தர், காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.ஆர்.எம். பஸ்மீர், எம்.எச்.எம்.இஸ்மாயில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிராந்திய முக்கியஸ்தர்கள் மற்றும் அம்பாறை தென்னை அபிவிருத்தி சபையின் பிராந்திய முகாமையாளரின் ஆலோசனைக்கமைவாக சம்மாந்துறை தென்னை  அபிவிருத்தி பிரிவின் தென்னை அபிவிருத்தி  உத்தியோகத்தர் ஏ.வி.எம்.நியாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனா். இதன்போது தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு இத்திட்டத்தின் கீழ்  500 தென்னங்கன்றுகள் பகிர்ந்தளிக்கப்பட்டது.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours