மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரபல போதைப்பொருள் வியாபாரி உட்பட மூவர் கும்புறுமூலை இராணுவச் சோதனைச் சாவடியில் வைத்து மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மட்டக்களப்பு ஜெயந்திபுரம், இருதயபுரம், செட்டிப்பாளையம் ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், இவர்களிடமிருந்து 100 கிராம் ஐஸ் போதைப்பொருளும், போதைப்பொருளைக் கடத்திச் செல்ல பயன்படுத்தப்பட்ட வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய வாழைச்சேனை பொலிஸாரோடு இணைந்து மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின் போது இவர்கள் மூவரும் மடிக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours