நூருல் ஹுதா உமர்

 

பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகராலய ஊடக பிரதானி ஹல்சூம் கைஸர் ஜிலானி அவர்களுக்கும் சிலோன் மீடியா போரத்தினருக்குமிடையிலான சந்திப்பு சாய்ந்தமருதில்  (20)  இடம்பெற்றது.


இதன்போது ஊடகவியலாளர்களுக்கான புலமைப் பரிசில் திட்டம், தொழில்நுட்ப உபகரணங்கள் வழங்குதல் மற்றும் இலங்கை - பாகிஸ்தான் இரு நாட்டு ஊடகவியலாளர்களுக்குமிடையில் பரஸ்பர உறவினை ஏற்படுத்தல் போன்றவை தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டன. இச்சந்திப்பில்  ஊடகவியலாளர்களின் தேவைகள் அடங்கிய மகஜரும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டது. 


சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ. மஜீத், பொதுச் செயலாளர் ஏ.எஸ்.எம்.முஜாஹித், பொருளாளர் நூருள் ஹுதா உமர், ஆசிரியர் சௌபி இஸ்மாயில், பிரதித் தலைவர் எஸ்.அஷ்ரஃப்கான், பிரதிச்செயலாளர் கியாஸ் ஏ புகாரி, உதவிச் செயலாளர் எம்.எம்.ஜபீர், உட்பட செயற்குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். 




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours