நூருல் ஹுதா உமர்

கல்முனையை செதுக்கிய சிற்பி என போற்றப்படும் முன்னாள் வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் கலாநிதி ஏ.ஆர்.எம். மன்சூரின் நாலாவது ஆண்டு நினைவு தின துஆ பிராத்தனையும், நினைவுரையும் இன்று (23) வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையை தொடர்ந்து கல்முனை மக்களின் ஏற்பாட்டில் கல்முனை முஹையத்தீன் ஜும்மா பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது.

மௌலவி அஸ்ஸெக் டீ .ஆர். நௌபர் அமீன் (வாஹிதி) அவர்கள் கடந்த காலங்களில் முன்னாள் வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் கலாநிதி ஏ.ஆர்.எம். மன்சூர் அவர்கள் இனங்களுக்கிடையிலான உறவுப்பாலமாகவும் அபிவிருத்திகள் செய்வதில் கொண்டிருந்த உத்வேகம் தொடர்பிலும் உரை நிகழ்த்தியதுடன் முன்னாள் அமைச்சருக்காக துஆ பிராத்தனையும் நிகழ்த்தினார். இதன் போது கொரோனா அலையிலிருந்து நாடு விடுபடவும், கொரோனா தடுப்பில் ஈடுபடும் சகல தரப்பினருக்கும் அருள் வேண்டியும் பிராத்தனையில் ஈடுபட்டார்.

கல்முனை மாநகர பிரதி முதல்வர் ரஹ்மத் மன்ஸூர் உட்பட கல்முனை மக்கள் பலரும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். 




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours