கோவிட் 19 காரணத்தினால் தொழிலை இழந்து பாதிக்கப்பட்ட கல்முனைத் தமிழ்ப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 29 கிராமசேவகர் பிரிவில் வசிக்கும் குழந்தைகளின் சத்துணவுத்திட்டத்தின் மூலம்  கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் ஒழுங்கமைப்பில் அதன் தலைவர் ஆ.குணசேகரம் தலைமையில் சிறுவர்களுக்கான சத்துணவு வழங்கிவைக்கும் நிகழ்வு 7 ஆம் திகதி புதன்கிழமை நற்பட்டிமுனையில் இடம்பெற்றது.

இதன் போது அப்பகுதிகளில் வசிக்கும் 100 குழந்தைகளுக்கான சத்துணவுப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.

 அமைப்பின்  கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் பொதுச்செயலாளர் வா.குணாளன்   அமைப்பின் அம்பாரைமாவட்டத்தின் பொருளாளரும் உயர் பீட உறுப்பினருமான எஸ். நாகேந்திரன்.ஆலோசகர் க.வரதராஜன் ஆகியோர் கலந்துகொண்டு பொருட்களை வழங்கிவைத்தனர்







Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours