(திருக்கோவில் -எஸ்.கார்த்திகேசு)



இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சின் ஊடாக தேசிய விளையாட்டு தினம் இன்று நாடுபூராகவும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் திருக்கோவில் பிரதேச செயலகத்திலும் இவ் தேசிய விளையாட்டு தின நிகழ்வகள் இன்று முன்னெடுக்கப்பட்டு இருந்தன.

இவ் தேசிய விளையாட்டு தின நிகழ்வுகள் திருக்கோவில் பிரதேச செயலக இளைஞர் சேவை உத்தியோகத்தர் கே.பிரபாரனின் ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரனின் தலைமையில் பிரதேச செயலக வளாகத்தில் இன்று (30) இடம்பெற்று இருந்தன.

தேசிய விளையாட்டு தினமான இன்று தேசிய கீதம் இசைக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து பிரதேச செயலக உத்தியோர்த்தர்கள் அனைவரும் உடற்பயிற்சியில் ஈடுபட்டு இருந்துடன் உடற்பயிற்சியினை தாண்டியடி விக்ணேஷ்வரா மா வித்தியாலயத்தின் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் லவகேஸ்வரன் முன்னெடுத்து இருந்தார்.

இந்நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.அனோஜா நிருவாக உத்தியோகத்தர் எஸ்.நடேசன் கிராம சேவையாளர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் திருமதி பரிமளவாணி சில்வெஸ்டர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours