( வி.ரி.சகாதேவராஜா)

சுகாதார அமைச்சின் பிரதிசுகாதாரசேவைபணிப்பாளர் நாயகம் டாக்டர் லால் பணபிட்டிய தலைமையிலான உயர்மட்ட அதிகாரிகள் குழு கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் செய்தது.
நேற்றுமுன்தினம்(18) இவ்விஜயம் இடம்பெற்றது.

கல்முனை ஆதாரவைத்தியசாலை வைத்தியஅத்தியட்சகர் வைத்தியகலாநிதி டாக்டர் இரா.முரளீஸ்வரன் விடுத்த வேண்டுகோளின்பேரில்  கல்முனைக்கு விஜயம் செய்த பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேலகுணவர்த்தனவின் ஒருகுழுவினர் அங்கு விஜயம்செய்திருந்தனர்.

சுகாதார அமைச்சின் பிரதிசுகாதாரசேவைபணிப்பாளர் நாயகம் (மருத்துவசேவைகள்) டாக்டர் லால் பணபிட்டிய மருத்துவ வழங்கல்பிரிவு பணிப்பாளர் டாக்டர் கபில ஆய்வுகூட பணிப்பாளர் டாக்டர் விஜித குணசேகர உள்ளிட்ட உயர்மட்டக்குழுவினர் விஜயம்செய்தனர்.

அவர்கள் வைத்தியசாலையில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டுவரும் கொவிட் விசேடபிரிவைப் பார்வையிட்டு பூரண திருப்தியடைந்தனர். அங்கு நோயாளிகளுக்கு வழங்கப்பட்டுவரும் பாதுகாப்பு பராமரிப்பு சேவைகளை நேரடியாகக் கண்ணுற்று பாராட்டும் தெரிவித்தனர்.வைத்தியசாலை கவின்நிலை வழங்கப்படும் சுகாதாரசேவைகள் குழுவினரை வெகுவாகக்கவர்ந்தது.

இதன்போது வைத்திய நிபுணர்களின் தேவை ஆய்வுகூடவசதிகள் ஒட்சிசன் விநியோகம் தேவையான மருத்துவ உபகரணங்கள் பற்றி பூரண தகவல்களை எழுத்துமூலம் வைத்தியஅத்தியட்சகர் டாக்டர் முரளீஸ்வரன் குழுவினரிடம் சமர்ப்பித்தார்.

தேவைகளை முடியுமானவரை பூர்த்தி செய்துதருவதாக குழுவினர் உறுதியளித்தனர்.

நிகழ்வில் வைத்தியசாலையின் பிரதிவைத்தியஅத்தியட்சகர் டாக்டர் சோ.திருமால் தாதியபரிபாலகர் எஸ்.சஜிந்திரன் பிரதமமுகாமைத்துவஉதவியாளர் ரி.தேவஅருள் நிருவாக உத்தியோக்தர் எஸ்.கிருஸ்ணகுமார் பராமரிப்புப்பிரிவு பொறுப்பதிகாரி கே.சுந்தர் உள்ளிடடோரும் கலந்துகொண்டு விளக்கமளித்தனர்



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours