நூருல் ஹுதா உமர்

கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் கொரோனா அதிதீவிர சிகிச்சை நிலையத்திற்கு 50 லட்சம் ரூபாய் பெறுமதியான அதி தீவிர சிகிச்சை நிலையத்திற்கு தேவையான உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (13) கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல். எப் ரகுமான் தலைமையில் நடைபெற்றது.

முன்னாள் சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான பைசால் காசீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் நிர்வாகத்தினரிடம் பொருட்களை உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தார். இந் நிகழ்வில் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை திட்டமிடல் வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.இலாஹி, சிரேஷ்ட வைத்திய அதிகாரி ஏ.ஆர்.எம் ஹாரிஸ்,  உட்பட வைத்தியசாலை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours