(க.விஜயரெத்தினம்)


கல்முனை சுகாதார சேவைகள்  பிராந்தியத்தில் முதலாவது தடுப்பூசி ஏற்றும் பணிகள் 93  சதவிகிதத்தை(சதவீதத்தை)தாண்டியுள்ளதாகவும்,இன்னும் மூன்று கிழமைகளில் நாம் கல்முனை பிராந்தியத்தில் கோரோனோ (கொவிட்-19)மரணங்களை பூச்சியத்திற்கு கொண்டு வருவோம் என கல்முனை சுகாதார சேவைகள் பிராந்தியப் பணிப்பாளர் டாக்டர் குணசிங்கம் சுகுணன் இன்று சனிக்கிழமை(28)காலை தெரிவித்தார்.

அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்.....

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பகுதிகுட்பட்ட பகுதிகளில்
இரண்டாவது தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் எதிர்வரும்  திங்கட்கிழமை முதல் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்படுகின்றது.
அதற்கேற்ப பிராந்தியத்தில் பொதுமக்கள் தமக்குரிய நாட்களில் தங்களது தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளுங்கள்.இன்னும் மூன்று கிழமைகளில் நாம் கல்முனை பிராந்தியத்தில் கொவிட்-19 மரணங்களை பூச்சியத்திற்கு கொண்டு வருவோம் எனத்தெரிவித்தார்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours