எஸ். சதீஸ் -
எமது நாட்டில், ஜனாதிபதியின் கொவிட் தடுப்பு செயற்பாடுகளை குறைத்து மதிப்பிட முடியாது. நாடு முடக்கப்பட்ட போதிலும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையும் கொவிட் 19 தடுப்பு நடவடிக்கையும் வெற்றிகரமாக இடம்பெற்று வருகின்றன.
என பொது ஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர், பிரதேச அபிவிருத்தி குழு தலைவருமான ப.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்
ஊடகங்களுக்கு அவர் கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அமைச்சர் நாமல் ராஜபக்ஷ வடக்கு, கிழக்கில் தடுப்பூசி செலுத்துவதில் விசேட கவனம் செலுத்தி வருகின்றார்.
இந்த அரசாங்கம் சிங்கள மக்களின் பெரும்பான்மை வாக்குகளால் உருவாக்கப்பட்டாலும், அரசு தமிழ் மக்களுக்குரிய அபிவிருத்திகளையும் வேலைவாய்ப்புக்களையும் உரிய முறையில் பகிர்ந்தளிக்கின்றது.
நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் பல அபிவிருத்தி திட்டங்கள் தடையின்றி இடம்பெற்று வருகின்றது.
நாங்கள் மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு வாக்குறுதி வழங்கியதுே போல் அபிவிருத்தியும் வேலைவாய்ப்பும் கட்டம் கட்டமாக நடைபெற்று வருகின்றது. கொவிட் ஒழிக்கப்பட்டு, நாடு ஒரு நல்ல சூழ்நிலைக்கு வந்ததும் நிச்சயம் எமது வாக்குறுதிகள் முழுமை பெறும் என தெரிவித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours