கிழக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தீநுண்மி யின் தாக்கம் மீண்டும் அதிகரித்திருக்கிறது.
மூன்றாவது அலையின் ஆரம்பத்தில் திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை ஆகிய பிரதேசங்கள் அபாயகரமாக மாறிஇருந்தது. எனினும் இடைநடுவில் சற்று தணிந்திருந்தபோதிலும் கடந்த இருவாரகாலமாக அந்நிலைமை மாறி தற்போது படுவேகமாக தாக்கத்தொடங்கியுள்ளது.
குறிப்பாக கல்முனை மட்டக்களப்பு அம்பாறை ஆகிய பிரதேசங்களில் கூடுதலான தாக்கத்தை செலுத்த ஆரம்பித்துள்ளது.
தொற்றுக்களின் எண்ணிக்கை 20ஆயிரத்தை தாண்டியுள்ளது. நேற்று(02)திங்கட்;கிழமை பதிவின்படி எண்ணிக்கை 20ஆயிரத்து 21ஆக உயர்ந்துள்ளது என கிழக்கு மாகாண சுகாதாரசேவைத் பணிப்பாளர் டர்க்டர் ஏ.ஆர்எம்.தௌபீக் தெரிவித்தார்.
கிழக்கில் மரணித்தவர்களின் எண்ணிக்கை 350ஜ தாண்டியுள்ளது. அங்கு இதுவரை 364பேர் பலியாகியுள்ளனர்.இவர்களில் 339பேர் மூன்றாவது அலையில் மரணித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மட்டு.மாவட்டத்தில் 103பேரும் அம்பாறை பிராந்தியத்தில் 39 பேரும் திருமலை மாவட்டத்தில் 148பேரும் கல்முனைப்பிராந்தியத்தில் 74பேரும் மரணித்துள்ளனர்.
இறுதியாக சாய்ந்தமருதில ஒருவர் கொரோனவுக்கு பலியாகியுள்ளனர்.
நேற்று(2)வரை 20021பேருக்கு கொரோனாத்தொற்று ஏற்பட்டுள்ளது.இவர்களில் 18529பேர் குணமாகி வீடு சென்றுள்ளனர்.1136பேர் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.
10லட்சம் பேருக்கு தடுப்பூசி தேவை!
கிழக்கு மாகாணத்தில் தடுப்பூசிக்கு தகுதிபெற்றவர்களாக 10லட்சத்து 40ஆயிரத்து 471பேர் உள்ளனர். இதுவரை 6லட்சத்து 65ஆயிரத்து 349 பேருக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதென கிழக்கு மாகாண சுகாதாரதிணைக்கள பணிப்பாளர் டாக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்தார்.
மட்டு.மாவட்டத்தில் 227953பேருக்கும் அம்பாறை பிராந்தியத்தில் 112089 பேருக்கும் திருமலை மாவட்டத்தில் 163863 பேருக்கும் கல்முனைப்பிராந்தியத்தில் 161444பேருக்கும் தடப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை கிழக்கு மாகாணத்திற்க இதுவரை 8லட்சத்து 50ஆயிரம் வக்சீன்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றில் முதலாவது டோசாக 7லட்சத்து 75ஆயிரம் வக்சீன்களும் இரண்டாவது டோசாக 75ஆயிரம் வக்சீன்களும் கிடைக்கப்பெற்றன.
இவற்றில் முதலாவது டோஸில் கிழக்கு மாகாணத்திற்கென வழங்கப்பட்ட 7லட்சத்து 75ஆயிரம் சைனோபாம் தடுப்பூசிகளில் 5லட்சத்து 94ஆயிரத்து 238ஊசிகள் ஏற்றப்பட்டுள்ளதென கிழக்கு மாகாண சுகாதாரதிணைக்கள பணிப்பாளர் டாக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக் மேலும் தெரிவித்தார்.
மட்டு.மாவட்டத்தில் 204406பேருக்கும் அம்பாறை பிராந்தியத்தில் 89485 பேருக்கும் திருமலை மாவட்டத்தில் 138903பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளன. இறுதியாக கிடைக்கப்பெற்ற கல்முனைப்பிராந்தியத்தில் முதல் டோசாக இதுவரை 1லட்சத்து 61ஆயிரத்து 44பேருக்கு வக்சீன்கள் மிகத்துரிதமாக ஏற்றப்பட்டுள்ளன.

Post A Comment:
0 comments so far,add yours