இராமகிருஸ்ணமிசனின் கிழக்குமாகாணத்திற்கான மட்டக்களப்பு கல்லடி ஆச்சிரமம் கொரோனா காரணமாக தனிமைப்படுத்தலுக்காக மூடப்பட்டுள்ளது.
இ.கி.மிசன் மட்டக்களப்புக்கிளை கல்லடி உப்போடை இராமகிருஸ்ணபுரத்தில் பாரியவளாகத்தில் இயங்கிவருகிறது. அதன்பரிபாலனத்தின்கீழுள்ள இராமகிருஸ்ணமிசன் சிறுவர் இல்லம் சாரதா சிறுமியர் இல்லம் ஆகியவற்றில் சுமார் 140 சிறுவர் சிறுமியர்கள் ஆத்மீகசூழலில் வாழ்ந்துவருகின்றனர்.
அங்குள்ள இரு சுவாமிகள் மற்றும் 30மாணவர்களுக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து அவ்வளாகம் தனிமைப்படுத்தலுக்காக மூடப்பட்டுள்ளது. ஏனைய மாணவிகளுக்கு நேற்றும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
மிசனின் மட்டு.ஆச்சிரம மேலாளர் ஸ்ரீமத் சுவாமி தக்ஷ்யானந்தா ஜீ மஹராஜ் உதவிமேலாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மஹராஜ் ஆகியோருபட்பட 30மாணவர்களும் அங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
;இத்தனிமைப்படுத்தல கடந்த வெள்ளிக்கிழமை(6) தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டது.
உதவிமேலாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜி மஹராஜ்ஜிடம் தொடபுர்புகொண்டு கேட்டபோது சம்பவத்தை உறுதிசெய்யததுடன் இதுவரை மாணவர்க்குத்தேவையான சத்தணவு விற்றமின்கள் அனைத்தையும் தினமும் வழங்கிவருவதாகவும் நாஙகள் பாதுகாப்பாக மாணவர்களை பராமரித்துவருவதாகவும் யாருக்கும் பயப்படுமளவிற்கு ஏதுமில்லையெனவும் தெரிவித்தார்.
வெளியிலிருந்து மிசன் ஆச்சிரமத்திற்கு சேவைக்காக வரும் ஒருவருடாக இது தொற்றியிருக்கலாமென நம்பப்படுகிறது.
இ.கி.மிசன் சிறுவர் இல்லத்தில் தங்கியருந்த 50மாணவர்களுள் 30பேருக்கே தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இ.கி;மிசன் சாரதா சிறுமியரில்ல மாணவிகளுக்கு அன்ரிஜன்சோதனை இன்று மேற்கொள்ளப்படவிருப்பதாக சுவாமி மேலும் தெரிவித்தார்.
மிசன் வளாகம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் யாரும் உள்வரமுடியாது எனினும் மிசன் அபிமானிகள் உதவிவருவதாகவும் தனிமைப்படுத்தல் முடிவுற்றதன்பின்னர் மீண்டும் பிசிஆர் சோதனை செய்யப்பட்டு ஆச்சிரமம் திறக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

Post A Comment:
0 comments so far,add yours