(க.விஜயரெத்தினம்)
தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும்,மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை-சந்திரகாந்தனின் 46ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றது.தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும்,மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை-சந்திரகாந்தனின் 46ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றது.அந்தவகையில் பட்டிருப்பு தொகுதியிலும் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றது.மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி உறுப்பினர் த.சுதாகரனின் ஏற்பாட்டிலும்,அவருடைய தலைமையிலும் களுவாஞ்சிகுடி மகிழூர்முனையில் பாரிய சிரமதான நிகழ்வுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை(15)காலை 9.00 முதல் 11.00 மணி வரையுள்ள காலப்பகுதியில் நடைபெற்றது.
இதன்போது மகிழூர்முனை சக்தி வித்தியாலயத்தின் வளாகம் கட்சியின் ஆதரவாளர்களால் சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டது.பாடசாலை வளாகத்தில் உள்ள இங்கு மண்மேடுகள் அகற்றப்பட்டும்,பாடசாலையின் சுற்றுச்சூழல் டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகாத வகையில் பாரிய துப்பரவுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகிழூர்முனை அமைப்பாளர் வேல்முருகு தியாகராஜா,மகிழூர் சக்தி வித்தியாலயத்தின் அதிபர் திருமதி.மீனசுலோஜனா துரைசிங்கம்,மற்றும் ஆசிரியர்கள்,பெற்றோர்கள்,கட்சியின் கிராமியத்தலைவர்கள்,கட்சி ஆதரவாளர்கள்,மகளீர் அமைப்புக்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி கலந்துகொண்டார்கள்.




Post A Comment:
0 comments so far,add yours