(க.விஜயரெத்தினம்)
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும்,மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்,மாவட்ட அபிவிருத்திகுழு இணைத்தலைவருமான சிவநேசதுரை-சந்திரகாந்தனின் 46ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கட்சியின் தலைமைக்காரியாலயத்தில் மாபெரும் இரத்ததான நிகழ்வு இன்று இடம்பெற்றது.மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் குருதிதட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் நோக்கில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியின் பொறுப்பதிகாரி விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவும்,தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும்,மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை-சந்திரகாந்தனின் 46ஆவது பிறந்தநாளை (18.8.2021) முன்னிட்டும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சிரமதானம்,இரத்ததானம்,மரநடுகை நிகழ்வுகள்,போன்றன கட்சியின் பொதுச்செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தனின் ஏற்பாட்டிலும்,அவரது தலைமையிலும் இடம்பெற்றுள்ளது.
இரத்ததான நிகழ்வுகள் இன்று புதன்கிழமை(18)காலை 8.00 முதல் மாலை 5.00 வரையுள்ள காலப்பகுதியில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள்,கட்சியின் ஆதரவாளர்கள் வருகைதந்து இரத்தக்கொடையை வழங்கினார்கள்.
இதேவேளை கனடாக் கிளையின் ஏற்பாட்டில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கௌரவ கிழக்கின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் பிறந்த தினத்தினை முன்னிட்டு கிழக்கு மாகாணத்தின் தலைமைகள் வாழையடி வாழையாக தழைத்தோங்க வேண்டும் என்ற நோக்கோடும் கிழக்கு மாகாணத்தில் மக்களிடையே சுய தேவைப் பொருளாதார விளிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கனடாக் கிளையின் ஏற்பாட்டில் கனடா கிளை ஒருங்கிணைப்பாளர் சாந்தலிங்கம் கண்ணன் அவர்களின் வழிகாட்டுதலில் 1000 பயனாளிகளுக்கான வாழைக்குட்டிகள் பகிர்ந்தளிக்கும் நிகழ்வும், வாழைக்குட்டிகள் நாட்டிவைக்கும் நிகழ்வும் கட்சியின் தலைமைச் செயலகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன்,மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கான பொறுப்பதிகாரி டாக்டர் கந்தசாமி ஹரிசாந் தலைமையிலான தாதி உத்தியோகஸ்தர்கள் மற்றும் கட்சியின் அங்கத்தவர்கள்,அடிமட்ட தொண்டர்கள் கிராமியத்தலைவர்கள்,கட்சி ஆதரவாளர்கள்,மகளீர் அமைப்புக்களின் பிரதிநிதிகள்,சுகாதார விதிமுறைகளை(கொவிட்-19) பின்பற்றி இரத்ததான நிகழ்வில் கலந்துகொண்டார்கள்.






Post A Comment:
0 comments so far,add yours