வாழைச்சேனை பொலிஸ்பிரிவிற்குட்பட்;ட பகுதியில் உள்ள வர்தகநிலையமொன்றில் இருந்து பொண் ஒருவரின் சடலம் உரப்பையில் இருந்து (5) திகதி மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாழைச்சேனைப் பிரதான வீதியிலுள்ள வர்த்தக நிலையத்தில் உரபேக்கில் கட்டப்பட்ட பார்சலை ஒருவர் கொண்டு வந்து வைத்து விட்டு பத்து நிமிடத்தில் எடுத்துக் கொள்வதாகச் சொல்லி விட்டுச்சென்றவர் வராத காரணத்தினால் வர்த்தக நிலைய உரிமையாளர் சந்தேக நபருக்க தொலைபேசி அழைப்பை விடுத்த போது அதை வைத்துக் கொள்ளுங்கள் நான் வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
பின்னர் பார்சலில் சந்தேகம் கொண்ட வர்த்தக நிலைய உரிமையாளர் பொலிஸ் நிலையம் சென்று செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபரும் வர்த்தக நிலைய உரிமையாளரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட குடும்பப்பெண் வாழைச்சேனை அல்லாப்பிச்சை வீதியைச் சேர்ந்த முகம்மட் ஹனீபா சித்தி லைலா என்று அடையாளங் காணப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு வாழைச்சேனை நீதிமன்ற நீதிவான் மற்றும் மட்டக்ளப்பு சட்டவைத்திய அதிகாரி தலைமையிலான குழு தடையவியல் பொலிஸர் பிரசன்னமாயிருந்தனர்
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மற்றும் மேற்கொண்டு வருகின்றனர்.

Post A Comment:
0 comments so far,add yours