(வி.ரி.சகாதேவராஜா)

நாட்டை கட்டியெழுப்பவேண்டுமானால், இனவாதத்தை முதலில் ஒழிக்கவேண்டும். அதற்கான மூலவிசை கல்வியாகும். எனவே கல்வியூடாக நாம் அதனைச்சாதிக்கவேண்டும்.

இவ்வாறு சம்மாந்துறை வலயத்தில், புதிதாக தரமுயர்த்தப்பட்ட ஜந்து(5) தேசியப்பாடசாலைகளுக்கான கடிதங்களை வழங்கிவைத்துரையாற்றிய பொதுஜனபெரமுனவின் கல்முனைத்தொகுதி அமைப்பாளர் றிஸ்லிமுஸ்தபா குறிப்பிட்டார்.

சம்மாந்துறை வலயத்திலுள்ள தாருஸ்ஸலாம் மகா வித்தியாலயம், நாவிதன்வெளி அன்னமலை மகாவித்தியாலயம், அல்அர்சத் மகாவித்தியாலயம், அஸ்.சிறாஜ் மகாவித்தியாயலம் ,மல்வத்தை விபுலாநந்த மகா வித்தியாலயம் ஆகிய 5 பாடசாலைகளுக்கான தேசியபாடசாலை தரமுயர்த்தல் கடிதங்கள் வழங்கிவைக்கின்ற நிகழ்வு, சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் தலைமையில் பணிமனையில் சுகாதாரவிதிமுறைகளுக்கமைவாக நேற்று(20)வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டபிள்யு.எம்.வீரசிங்கவின் இணைப்பாளர் எ.எல்.எம்.ஜெசீம், உள்ளிட்ட பலபிரமுகர்கள் கலந்துசிறப்பித்த இந்நிகழ்வை உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா தொகுத்து நெறிப்படுத்திவழங்கினார்.

அங்கு அமைப்பாளர் றிஸ்லி முஸ்தபா மேலும் பேசுகையில்:

கொரோனாவை முன்வைத்து பலரும் லொக்டவுண் பண்ண சொல்கிறார்கள். ஜனாதிபதி அதைச்செய்யாமல் ஏன் கொண்டுசெல்கிறார்?. பொருளாதாரப்பிரச்சினை காரணமாகவே லொக்டவுண் பண்ணவில்லை.

அன்று எ.சி.எஸ்.ஹமீட் ,எம்.எச்.மொகமட் ,எம்.சி.அகமட் இவர்களையெல்லாம் பாராளுமன்றம் அனுப்பியது தனியே முஸ்லிம் சமுகம் மட்டுமல்ல.சிங்கள தமிழ்சகோதரர்கள் ,இணைந்தே அனுப்பினார்கள்.

ஆனால் இன்று வரும் அரசியல்வாதிகள் தனது சொந்த லாபங்களுக்காக சிறுபான்மை மக்களை இனவாதம் கற்பித்து காட்டியும் கூட்டியும் கொடுத்து பிரித்துவைத்துள்ளார்கள்.  இனமதபேதமற்ற செயற்பாடு செய்யவேண்டும்.

  கல்வியூடாகத்தான் சிற்நத ஜக்கியப்பட்ட சமுதாயத்தை கட்டியெழுப்பலாம்.அன்று கணணி;கல்வியை கிழக்கு மாகாணத்தில் முதன்முதலில் பெற்றுக்கொடுத்தவர் என தந்தையார் மையோண்முஸ்தபா அவர்கள்.
நாட்டிலுள்ள இனவாதத்தை எப்படி ஒழிப்பது? அது முக்கியமாக அதிபர் ஆசிரியர்கள் கைகளில்தான் தங்கியுள்ளது.

நான் எப்போதும் தமிழ்பேசும் சிறுபான்மை மக்கள் என்றுதான் குறிப்பிடுவது.தமிழ்பேசும் சிறுபான்மை மக்கள் என்றும் ஒன்றிணையவேண்டும்.
பாடசாலைகள் மட்டத்தில் மாணவரிடையே இனஜக்கியம் தொடர்பாக கல்வியிறிவூட்டவேண்டும். அது முக்கியமாக அதிபர் ஆசிரியர்கள் கைகளில்தான் தங்கியுள்ளது. நாம் வாழ்வது சிறியநாடு. ஒன்றிணைந்து செயற்பட்டால்தான் நாட்டை கட்டியெழுப்பமுடியும்.

ஆசிரியர்கள் அதிபர்கள் மாணவர்களுக்கு கல்வியை எப்படி கட்டியெழுப்புவார்களோ அப்படி தொழில்வாண்மை மிக்கவர்களை உருவாக்கவேண்டும்.நம்மவர்கள் பெரிய இடத்திற்குவரவேண்டும் பலருக்கு சிங்கள் ஆங்கில மொழி தெரியாமலிருப்பதுதான் அடிப்படைக்காரணம்.

ஒருவருடைய ஆளுமைவளர்ச்சியில் மொழிகள் முக்கியம் .மாணவருக்கு அதனைப்பெற்றுக்கொடுக்கவேண்டும்.ஆங்கிலமும், தகவல்தொழினுட்ப அறிவையும் மாணவர்க்கு கட்டாயம் பெற்றுக்கொடுக்கவேண்டும் என எனது தந்தையார் மையோண்முஸ்தபா முயற்சியெடுத்தார்.
நாம் பின்தங்கிய பகுதி பாடசாலைகளுக்குச்சென்று சிலபல உதவிகளைசெய்துள்ளோம். இங்கும் செய்வோம்.என்றார்.








Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours