(க.விஜயரெத்தினம்)
மட்டக்களப்பு – காயங்குடா பிரதேசத்தில் காட்டுயானை தாக்கியதில் 06 பிள்ளைகளின் தந்தை ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிசார் தெரிவித்தனர்.மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரடியனாறு காயங்குடா பகுதியில் காட்டு யானை தாக்கியதிலே குடும்பஸ்தர் ஒருவர் சனிக்கிழமை(21)அதிகாலை உயிரிழந்துள்ளார்.
தம்பானம்வெளி கொடுவாமடு கிராமத்தைச்சேர்ந்த 44 வயதுடைய 06 பிள்ளைகளின் தந்தையான தங்கராசா ஸ்ரீராஜஜெயம் என்பவரே இவ்வாறு காட்டுயானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.செங்கலடி பதுளை பிரதான வீதி காயங்குடா பிரதான வீதியால் துவிச்சக்கரவண்டியில் சென்றுகொன்டிருக்கும் போதே வீதியில் தரித்து நின்ற காட்டு யானை சரமரியாக தாக்கியுள்ளது.மேலும் குறித்த யானை வீதியோரத்தில் இருந்த மரங்களையும் முறித்து சேதப்படுத்தியுள்ளது.
பிரதான வீதியோரத்தின் அருகே உள்ள காணியொன்றினுள் சடலமாக காணப்பட்ட குடும்பஸ்தர் தொடரபான விசாரணைகளை கரடியனாறு பொலிசார் முன்னெடுத்துள்ளதுடன், சம்பவ இடத்திற்கு வருகை தந்த மரணவிசாரணை அதிகாரி சடலத்தை பார்வையிட்டதுடன் அது தொடர்பாகவும் விசாரணைகளை முன்னெடுக்கின்றார்.சடலம் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
Post A Comment:
0 comments so far,add yours