மட்டக்களப்பு காத்தான்குடியில் இடம்பெற்ற "வாழும் போதே வாழ்த்தும்" பல்துறை சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வு!!

காத்தான்குடி மீடியா போரத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் இடம்பெறும் "வாழும் போதே வாழ்த்தும்" பல்துறை சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வு காத்தான்குடியில் இடம்பெற்றது. 

மீடியா போரத்தின் தலைவர் ஊடவியலாளர் எம்.எஸ்.எம்.சஜீ  தலைமையில் இடம் பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக

காத்தான்குடி பிரதேச கல்விப் பணிப்பாளர் எம்.எம்.கலாவுதீன் கலந்துகொண்டதுடன்,

இதன்போது கல்வி, ஊடகம் மற்றும் அரசியல் துறை சார்ந்தவர்கள் அதிதிகளினால் கௌரவிக்கப்பட்டனர்.

கொவிட் சூழ்நிலையினை கருத்திற்கொண்டு சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றியவாறு இடம்பெற்ற இந்நிகழ்வில் காத்தான்குடி மீடியா போரத்தின் உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours