(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு
நாட்டின் அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்டு, தற்போதைய அரசாங்கத்தின், அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் தேசிய கொள்ளை பிரகடனமாகிய “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைத் திட்டத்தில் தொழிற்படையின் ஆற்றல்கள், திறன்கள் மற்றும் தொழில்நுட்ப அறிவுமிக்க மனிதவளத்தை வலுவூட்டுகின்ற அடிப்படையில் உலகளாவிய மட்டத்திலான தொழிற்படையை இலங்கையில் உருவாக்கும் நோக்கில் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சின் கீழ், மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களம் தேசிய தொழில் வழிகாட்டல் வாரம் ஒன்றினை எதிர்வரும் ஒக்டோபர் 04 ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் செயற்படுத்த திட்டமிட்டுள்ளது.
இத்தொழில் வழிகாட்டல் வாரத்தினை முன்னிட்டு, பாடசாலை மாணவர்கள், 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கான போட்டி நிகழ்வுகள் நிகழ்நிலை (ழுடெiநெ) மூலம் நடாத்தப்படவுள்ளன. இப்போட்டி நிகழ்ச்சிகளாக, சித்திரம், பேச்சு, கட்டுரை, கவிதை மற்றும் அறிவுத்திறன் சார் வினாடிவினாவிடைப் போட்டிகள் என்பன நடைபெறுவதோடு, அப்போட்டிகள் சம்பந்தமான பொதுவான நிபந்தனைகளாவன,
1. சித்திரம், பேச்சு, கட்டுரை, கவிதை போன்ற போட்டிகளுக்காக கீழ்காணும் தலைப்புக்களில் ஒன்று பயன்படுத்தப்படல் வேண்டும்.
• இலங்கையில் எதிர்கால தொழில் உலகை வென்றெடுப்பதற்கு தொழில் வழிகாட்டலின் முக்கியத்துவம்.
• 21 ஆம் நூற்றாண்டும் தொழில் வழிகாட்டலும்.
• கனவு காண்போம், திட்டமிடுவோம், தொழில் உலகை அழகுபடுத்துவோம்.
• நாட்டின் அபிவிருத்திக்கு இளைய சமூகத்தின் பங்களிப்பு.
• நாடான்றிற்கு தொழில் வழிகாட்டல் சேவையின் முக்கியத்துவம்.
2. ஒவ்வொரு போட்டிக்காகவும் வெவ்வேறான விண்ணப்பங்கள் கோரப்படுவதோடு அதற்காக புழழபடந கழசஅ ஒன்று வழங்கப்படும். இவற்றை மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.
3. தங்களது விண்ணப்பப்படிவத்துடன் ஆக்கம் (இரு பக்கங்களும்) புகைப்படமாக அனுப்பவேண்டியதுடன் ஆக்கத்திற்கு பின்புறமாக தங்களது பெயர், விலாசம், தரம், வயது, பிரதேச செயலாளர் பிரிவு, மாவட்டம் என்பவற்றை குறிப்பிடல் வேண்டும்.
4. சித்திரம், கட்டுரை தொடர்பாக பங்குபற்றும் பிள்ளைகளின் ஆக்கத்தின் பின்புறம் தனது ஆக்கமானது தன் சுயமான ஆக்கம் என்பதனை தானே உறுதிசெய்தல் வேண்டும்.
இத்தோடு 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான கட்டுரைப்போட்டிக்குரிய தலைப்புகளாக,
• சிறந்ததொரு தொழிலாக முயற்சியாண்மை.
• தொழில் முயற்சியாண்மை மூலம் பொருளாதாரத்தை வெல்லுங்கள்.
• முயற்சியாண்மை கலாச்சாரத்தை உருவாக்குதல்.
இத்தோடு உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கான போட்டி நிகழ்சிகளும் நடைபெறவுள்ளன. மேற்படி போட்டி நிகழ்ச்சிகளில் பங்குபற்றும் அனைவருக்கும் பெறுமதியான சான்றிதழ்கள் வழங்கப்படுவதோடு மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தை பெற்றவர்களுக்கு 5000.00 ரூபாவும், இரண்டாம் இடத்தை பெற்றவர்களுக்கு 3000.00 ரூபாவும், மூன்றாம் இடத்தை பெற்றவர்களுக்கு 2000.00 ரூபாவும் பணப்பரிசுகளாக வழங்கப்படும். தேசிய மட்ட போட்டிகளுக்காக சான்றிதழ்கள் மற்றும் பணப்பரிசுகள் பின்வருமாறு வழங்கப்படும்.
முதலாம் இடம் - 25000.00
இரண்டாம் இடம் - 15000.00
மூன்றாம் இடம் - 10000.00
மேலும் தலா 3000.00 ரூபா வீதம் 10 ஆறுதல் பரிசுகள் வழங்கப்படும்.
இப்போட்டி நிகழ்ச்சிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி திகதி செப்டம்பர் 12 ஆம் திகதியாகும். விண்ணப்பங்கள் அனைத்தும் பழழபடந கழசஅ ஊடாகவே ஏற்றுக்கொள்ளப்படும். இதுபற்றிய மேலதிக விபரங்களை மாவட்ட செயலகத்தின் மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் இணையத்தளமான றறற.னழஅந.பழஎ.டம எனும் முகவரியில் பெற்றுக்கொள்ளமுடியும்

Post A Comment:
0 comments so far,add yours