(க.விஜயரெத்தினம்)

வந்தாறுமூலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுகாயம்.வாகனங்களும் சேதமடைந்துள்ளது.

மட்டக்களப்பு- திருகோணமலை பிரதான வீதியின் வந்தாறுமூலை பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை(8)மாலை 5.15 மணியளவில்  இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலை பிரதான வீதியில் களுவங்கேணி சந்தியடியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.குறித்த விபத்தானது மழை பெய்து கொண்டிருந்த வேளை எதிரெதிரே வேகமாக பயணித்துக்கொண்டிருந்த சிறியரக லொறியும்,பிக்கப் வண்டியொன்றும் மோதி விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இதனால் வாகனத்தின் சில்லுகள் கழன்றுள்ளதுடன் வாகனத்தின் முன்பகுதிகளும்
பலமாக அடிபட்டு சேதமடைந்துள்ளது.

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருவதுடன் சேதமடைந்த வாகனங்களை பொலிஸார் மீட்டெடுத்துள்ளார்கள்



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours