(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு
மட்டக்களப்பு காத்தான்குடி பிரதான வீதியில் நேற்று (19) திகதி இரவு வேளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று வாகனங்கள் சேதமாகியுள்ளது.
மட்டக்களப்பில் இருந்து ஆரையம்பதி நோக்கி பயனித்த ஹயஸ் ரக வன் முன்னால் சென்ற கே.டீ.எச் ரக வனினை முந்திச் செல்ல முற்பட்டபோது கட்டுப்பாட்டை இழந்த வன் மின்கம்பத்துடன் மோதியதுடன் அருகில் தரித்து நின்ற சிறிய ரக லொறியுடனும் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த விபத்தை ஏற்படுத்திய வன் உட்பட மூன்று வாகனங்களும் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரனைகளை காத்தான்குடி போக்குவரத்துப் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.
Post A Comment:
0 comments so far,add yours