(வி.ரி.சகாதேவராஜா)

காரைதீவு நந்தவன சித்திவிநாயகர் ஆலயத்தின் வருடாந்த ஆடிஅமாவாசை உற்சவ திருவிழாக்கள் சுகாதார நடைமுறைப்படி நடைபெற்றுவருகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமான குறித்த உற்சவம் தொடர்ந்து 9நாட்கள் திருவிழாக்கள் இடம்பெற்று எதிர்வரும் 8ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையுமென ஆலய தர்மகார்த்தா இரா.திருநாவுக்கரசு தெரிவித்தார்.

தற்போது தினமும் ஆலயபிரதமகுரு சிவஸ்ரீ மகேஸ்வரக்குருக்கள் தலைமையில் பகல் இரவு விசேட பூஜைகளுடன் திருவிழாக்கள் குறைந்த பக்தர்களின் பிரசன்னத்துடன் நடைபெற்றுவருகிறது.

வழமைக்குமாறாக இம்முறை சமுத்திரத்தில் அல்லாது ஆலய தீர்த்தக்கிணற்றில் தீர்த்தமாட உத்தேசித்துள்ளதாக அவர் மேலும் சொன்னார்.









Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours