க.விஜயரெத்தினம்)


மட்டக்களப்பு போதனா வைத்திசாலை இரத்த வங்கியில் இரத்தத்துக்கு தட்டுப்பாடு உடனடியாக இரத்தத்தை வழங்க முன்வருமாறு  இரத்த வங்கி பொறுப்பாளர் வைத்தியர் கந்தசாமி ஹரிசாந் கோரிக்கை விடுத்தார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் இரத்தத்திற்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.எனவே இரத்தத்தை தானமாக வழங்க பொது மக்கள்,இளைஞர்கள்,மகளீர்கள் முன்வருமாறு வைத்தியசாலை இரத்த வங்கி பொறுப்பதிகாரி வைத்தியர் கந்தசாமி ஹரிசாந் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி. சந்திரகாந்தனின் 46 பிறந்த தினமான இன்று புதன்கிழமை (18) முன்னிட்டு இரத்தானம் வழங்கும் நிகழ்வு கட்சி காரியாலயத்தில் இடம்பெற்றபோது வைத்தியர் இவ்வாறு தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒரே ஒரு போதனா வைத்தியசாலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ஆகும்ரஇங்கு பொலநறுவை தொடக்கம் அம்பாறை பொத்துவில் வரையிலான அதிகளவான நோயாளர்கள் இரத்த  சிசிச்சைக்காக இவ்வைத்தியசாலையை நாடி  வருகின்றனர்.

இந்த நிலையில் நாள்  ஒன்றுக்கு 30 தொடக்கம் 35 பைன் இரத்தம் தேவைப்படுகின்றது. அதேவேளை எமது பிரிவின் கீழ் உள்ள களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை, காத்தான்குடி ஆதார வைத்தியசாலை, வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைகளுக்கு எமது பிரிவின் ஊடாகத்தான் இரத்தம் வழங்கப்படுகின்றது.

அதேவேளை சிறுவர்களுக்கு ஏற்படும் தலசீமியா நோய் நோயாளர்கள் அதிகளவானோர் போதனா வைத்தியசாலையில் சிசிச்சை பெற்றுவருகின்றனர்.இந்த நோயாளர்களுக்கு ஒருமாதத்திற்கோ அல்லது இருவாரங்களுக்கு ஒருமுறை இரத்தம் ஏற்றவேண்டிய தேவை உள்ளதுடன்,விபத்தில் ஏற்படும்போது ஏற்படும் இரத்த இழப்புக்கு மற்றும் பெண்களின் பிரசவத்திற்கும் , சத்திரசிசிச்சை ஏற்படும்போதும், பல்வேறு நோய்களுக்கும் இரத்தம்  தேவைப்படுகின்றது.இரத்தவங்கிகளின் தேவையை நிவர்த்தி செய்தால்தான் வைத்தியசாலைகளின் செயற்பாடுகளை வினைத்திறனாக மாற்றியமைத்து மக்களின் வைத்தியசேவையை தங்குதடையின்றி எங்களால் நிறைவேற்றிக்கொள்ளலாம்.இதை உணர்ந்து ஒவ்வொருவரும் உணர்ந்து செயற்படும் காலம் வந்திருக்கின்றது.

இருந்தபோதும் தற்போது கொரோனா தொற்றுக்காரணமாக இரத்தம் பெறுவது மிகவும் கஷ்டமாக இருக்கின்றது.எனவே 18 வயதுக்கும் 58 வயதுக்கும் இடையிலுள்ள சுகதேகியான பொதுமக்கள் இரத்தத்தை நன்கொடை வழங்குவர்கள்.வைத்தியசாலைக்கு நேரடியாக வந்து இரத்தத்தை வழங்குங்கள் அல்லது இரத்தத்தை வழங்க கூடிய இரத்ததான முகாம்களை ஒழுங்கு செய்து தருமாறு அழைப்பு விடுக்கின்றோம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அல்லது கிழக்கு மாகாணத்தில் உள்ள புத்திஜீவிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள்,சமூக,சமய நிறுவனங்களின் பிரதிநிதிகள்,விளையாட்டுக்கழகங்களிள் பிரதிநிதிகள்,மகளீர் அமைப்புக்கள் போன்றோர்கள் தூரநோக்கு சிந்தனையுடன் செயற்பட்டும்,எம்மக்களின் உயிர்காப்பை கருத்திக்கொண்டும் உங்களால் முடியுமளவிற்கு இரத்ததான முகாம்களை கொவிட்-19 தொற்றைக் கருத்திக்கொண்டு ஏற்பாடு செய்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்தவங்கியின் குறைபாட்டை நிவர்த்தி செய்ய முன்வாருங்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours