(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு

30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான இரண்டாம் கட்ட கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் இன்று நாடளாவிய ரீதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலப்பகுதியிலும் நாடலாவிய ரீதியில் பல்வேறு இடங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் மட்டக்களப்பு நகர் பகுதியில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று (24) திகதி சிசிலியா மகளீர் தேசிய பாடசாலையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நாட்டில் தற்போது முடக்க நிலை அமுலில் உள்ள போதிலும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்ற நிலையில் மக்களும் தாமாகவே முன்வந்து தங்களுக்கான தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதில் அதிக கவனமெடுத்து ஆர்வத்துடன் தடுப்பூசி ஏற்றுகின்றமையினை காணமுடிகின்றது.

குறித்த தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையில் சுகாதார ஊழியர்கள் இராணுவத்தினர் மற்றும் அரச ஊழியர்களும் மிகவும் அர்ப்பணிப்புடன் தங்களது சேவையினை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours