(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு
நாட்டினுடைய மேன்மைதங்கிய ஜனாதிபதியின் நாட்டை சுபீட்சத்தின்பால் கட்டியெழுப்பும் தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைவாக அனைவருக்கும் சுத்தமான குடிநீர் என்னும் வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வுகள் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றன.
அதற்கு இணையாக மட்டக்களப்பு தன்னாமுனைப் பகுதிக்கு குடிநீர் இணைப்பினை வழங்கும் திட்டத்திற்கான அங்குரார்ப்பன நிகழ்வு இன்று (14) திகதி சனிக்கிழமை இடம்பெற்றது.
பின்தங்கிய கிராமிய பெருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு குறித்த வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்தார்.



Post A Comment:
0 comments so far,add yours