நூருள் ஹுதா உமர்.

நாட்டில் வேகமாக பரவிக்கொண்டு இருக்கும் கோவிட் 19 வைரஸ் தொற்றின் 3வது அலையினை எதிர் நோக்கிக்கொண்டு இருக்கும் இக்காலகட்டத்தில் அரசு நாட்டை முற்றாக முடக்குவது தொடர்பில் எந்தவிதமான விசேட நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் இருப்பது அதிகமான உயிரிழப்பை சந்திக்க வழிவகுக்கும் எனும் கோரிக்கையை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டமொன்று நிந்தவூர் வைத்தியசாலை முன்றலில் இடம்பெற்றது.  


இந்த போராட்டத்தின் மூலம் நாட்டை உடனடியாக முடக்குமாறு கோரிக்கை விடுக்கும் சுகாதார தொழிற்சங்க உத்தியோகத்தர்கள் அனைவரும் இணைந்து நாட்டை அவசரமாக முடக்குங்கள், பொது மக்களுக்கு பாதுகாப்பு வழங்குங்கள், போதிய அளவு பீ.சி.ஆர் பரிசோதனைகளை நாடு முழுவதும் செய்யுங்கள், வைத்திய சாலையில் அவசர நடைமுறைகளுக்கு ஏற்ப படுக்கைகளையும் அவசர சிகிச்சை பிரிவுகளுக்கான  போதிய வசதிகளையும் பெற்று கொடுங்கள் என்று கோரிக்கைகளை முன்வைத்த சுலோலங்களுடன் நாடு முழுக்க கவனயீர்ப்பு போராட்டத்தினை நடத்தினர்.  


அந்த அடிப்படையில் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் அனைத்து சுகாதார தொழிற்சங்க அதிகாரிகளும் ஒன்றிணைந்து புதனன்று அரசிடம் அதே  வேண்டுகோளை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours