இலங்கையில் நாள் ஒன்றின் அதி கூடிய கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளது. இதன்படி, நேற்றைய தினம் (25) கோவிட் தொற்றினால் 209 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் இலங்கையில் கோவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,157 ஆக அதிகரித்துள்ளது. நாளொன்றில் முதல் தடவையாக 200தை தாண்டிய கோவிட் மரணங்கள் நேற்று பதிவாகியுள்ளன.

இதேவேளை, கொவிட் தொற்றினால் இன்றைய தினம் 4,597 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இலங்கையில் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 412,370 ஆக அதிகரித்துள்ளது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours