(திருக்கோவில்-எஸ்.கார்த்திகேசு)


திருக்கோவில் பிரதேசத்தில் முதலாவது கொரோனா மரணம்

மக்கள் அவதாகமாக நடந்து கொள்ளுமாறு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி கோரிக்கை

கல்முனை திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவகப் பிரிவில் முதலாவது கொரோனா மரணம் இன்று 03ம் திகதி ஏற்பட்டுள்ளதாக திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் பி.மோகானகாந்தன் தெரிவித்துள்ளார்.

திருக்கோவில் தம்பட்டை கிராமத்தை சேர்ந்த 60 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு கோரோனா தொற்று காரணமாக இன்று செவ்வாய்க்கிழழமை மரணமடைந்துள்ளதாக திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்து இருந்தார்.

குறித்த நபர் கொரோனா தொற்று காரணமாக திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டு அங்கிருந்து அக்கரைப்பற்று கொரோனா சிகிச்சை நிலையத்தில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று மரணமடைந்துள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் உள்ள 13 பிரதேச சுகாதார வைத்தி அதிகாரப் பிரிவில் திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் இதுவரை காலமும் கொரோனா பாதிப்பு மிகவும் குறைந்த வீதத்தில் இருந்த போதிலும் தற்போது முதலாவது கொரோனா மரணம் எற்பட்டு இருப்பதானது மிகவும் கவலையளிப்பதாக அவர் மேலும் தெரிவித்து இருந்தார்.

திருக்கோவில் பிரதேசத்தில் தற்பேபாது கொரோனா தொற்று வீதம் அதிகரித்துச் செல்லும் நிலையில் பிரதேசத்தில் தடுப்பூசிகள் எற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் தடுப்பூசியை ஏற்றிக் கொள்ளத் தவறியவர்கள் தடுப்பூசியை ஏற்றிக் கொள்வதுடன் தடுப்பூசியை ஏற்றிக் கொண்டவர்களும் சுகாதார விதிமுறை கடைப்பிடித்து கொரோனா தொற்றினால் ஏற்படும் மரணத்தை தடுத்துக் கொள்ளுமாறு திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பி.மோகனகாந்தன் திருக்கோவில் பிரதேச மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours