ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கான சம்பள அதிகரிப்பிற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது  இதற்கான தீர்மானம் தொழிற்சங்கப் பிரதிநிதிகளிடம் இன்று கையளிக்கப்பட இருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைச் செயலாளர் பொ.உதயரூபன் தெரிவித்தார்

சுபோதினிக் குழுவின் தீர்மானத்திற்கு அமைவான சம்பளத்திட்டத்தின் தீர்மானத்தினை உபகுழு மற்றும் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன அவர்களும் ஏற்றுக்கொண்டும் அதனை நடமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை கட்டம் கட்டமாக வழங்குவதற்குத் தீரமானித்து இருப்பதனை இலங்கை ஆசிரியர் சங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை என ; மட்டக்களப்புக் கிளைச் செயலாளர் பொ.உதயரூபன் தெரிவித்தார்.  இது தொடர்பாக கலந்தாலோசிப்பதற்கு  ஒன்றிணைந்த தொழில் சங்கத்தின் அவசர கூட்டம் கொழும்பில் நடைபெற இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours