(சா.நடனசபேசன்)

சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில்; அம்பாரை மாணிக்கமடுப் பிரதேசத்தில் வாழும்  பொதுமக்களுக்கு உடுதுணிகள் வழங்கிவைக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை 31 ஆம் திகதி இடம்பெற்றது.

இவ் உடுதுணியினை அமைப்பின் கிழக்குமாகாணக்கிளையின் பொருளாளர் பாவாணர் அக்கரைப்பாக்கியன் கணக்காய்வாளர் நாகேந்திரன் தொழிற் சங்கப் பிரதிநிதி கணேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு இவ் உடுதுணிகளை வழங்கிவைத்தனர்.

சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் செயலாளர் அம்பலவாணர் ராஜன் மற்றும் உதவிச் செயலாளர் வி.பேரின்பராசா மற்றும் அங்கத்தவர்களான ரமேஸ்,வின்சன் ஆகியோர்களின் முயற்சியினாலும் அமைப்பின் தலைவர் டி.எல்.சுதர்சன் பொருளாளர் க.துரைநாயகம் ஆகியோரின் ஒத்துழைப்புடன் இவ் உடுதுணிகள் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.








Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours