(வி.ரி.சகாதேவராஜா)
நாகசதுர்த்தி தினத்தையொட்டி பனங்காடு நாககாளிஅம்பாள் ஆலயத்தில் மாபெரும் யாகபூஜை நேற்று நடாத்தப்பட்டது.

நாட்டில் கொரோனா தீநுண்மியின் தாக்கம் அகலவேண்டும்இக்கொடியநோயிலிருந்து நாட்டு மக்கள் முற்றுமுழுதாக விடுபடவேண்டும் எனக்கோரி தவிசாளர் ஜெயசிறிலின் நலன்வேண்டியும் அருளாசிவேண்டி  இவ்வயாகம் சமுசசெயற்பாட்டாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் குடும்பத்தினரால் நடாத்தப்பட்டது.

ஆலய பிரதமபூசகர் நடராஜா நாகராஜா இவ்யாகபூஜையை தலைமைதாங்கி சிறப்புறநடாத்தினார்.

ஆலையடிவேம்புப்பிரதேசத்திலுள்ள இவ்வாலயத்தின் ஆலயத்தலைவர் கே.நடராஜாவின் முன்னிலையில் யாகம் நடைபெற்றது.

சுகாதாரமுறைப்படி குறைந்த பக்தர்கள் இதில் கலந்துகொண்டனர்.






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours