(அஸ்லம் எஸ்.மௌலானா)
பாலமுனை பிரதேசத்தில் சில இடங்களில் காணப்பட்ட குடிநீர்த் தேவையினை நிவர்த்தி செய்து தருமாறு தேவையுடையவர்கள் ரஹ்மத் பவுண்டேசனிடம் வேண்டிக் கொண்டதற்கிணங்க அதன் ஸ்தாபக தலைவரும் கல்முனை மாநகர சபை பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின் ஏற்பாட்டில் குறுகிய நாட்களுக்குள் பொதுக்கிணறுகள் அமைக்கப்பட்டு, கையளிக்கப்பட்டுள்ளன.
இவற்றை மக்கள் பாவனைக்காக இன்று உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வில் ரஹ்மத் மன்சூர் அவர்கள் உட்பட ரஹ்மத் பவுண்டேசன் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இவ் உயரிய சேவையை செய்வதற்கு பூரண அணுசரணை வழங்கிய YWMA பேரவைக்கு ரஹ்மத் மன்சூர் அவர்கள் தனது விஷேட நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.




Post A Comment:
0 comments so far,add yours